சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிப்காட் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம். கரிசல் குளம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்று பள்ளிக்கு வந்தவுடன் 2வது மாடியில் ஏறி கீழே குதித்துள்ளார்.
உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். பின்னர், மாணவி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், மானாமதுரை போலீசார் சம்பவத்திற்கான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர்.
மாணவிக்கு பள்ளியில் எந்தவொரு அழுத்தம் இருந்ததா? அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமா? என்பது விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த திடீர் சம்பவம், பள்ளி வளாகத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.