காரைக்குடி - Karaikudi

சிவகங்கை: கருவேல மரங்களை கல்லல் ஊராட்சி ஒன்றிய மூலமாக பொதுஏலம் விட மனு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கல்லல் ஊராட்சி ஒன்றியம், கல்லுப்பட்டி பஞ்சாயத்தில் சிறுகடம்பன் கண்மாய் குருமுத்தங்குடி கண்மாய் மானகிரி திடல் ஆகிய இடங்களில் அதிகளவில் கருவேல மரங்களை பெரிய மரங்களாக உள்ளதாகவும் மழை பெய்தாலும் கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்படுகின்றது. கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதாவும் கல்லுப்பட்டி ஊராட்சியில் மக்கள் அடிப்படை தேவைக்காக ஊராட்சி மன்றத்தை அனுகினால் ஊராட்சி பொது நிதியில் பணம் இல்லை என்று சொல்கிறார்கள் சிறகடம்பன் கண்மாய் மற்றும் மானகிரி திடல் ஆகிய இடங்களில் உள்ள கருவேல மரங்களை கல்லல் ஊராட்சி ஒன்றிய மூலமாக பொது ஏலம் விட்டு, அந்த பணத்தை கல்லுப்பட்டி ஊராட்சி பொது நிதியில் சேர்த்து விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார மற்றும் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென இன்று மதியம் சுமார் 3: 30 மணியளவில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சிவகங்கை
Nov 05, 2024, 17:11 IST/சிவகங்கை
சிவகங்கை

சிவகங்கை: மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை நகரில் சிலை அமைக்க கோரிக்கை

Nov 05, 2024, 17:11 IST
மருதரசர்கள் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளை, மருதரசர்கள் ஆன்மீக சங்கமம், மருது பவுண்டேஷன், வீரப்பேரரசு மருதுபாண்டியர் எழுச்சி இயக்கம், அகமுடையார் முன்னேற்ற சங்கம், தமிழக தலைமை அகமுடையார் சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்- திடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது மருதரசர்கள் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளையின் மாநில தலைவர் கோ. பஞ்சாட்சரம், மாநில மகளிர் தலைவி மு. பானுமதி கூறுகையில் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை நகர் பகுதியில் வெண்கல சிலை அமைக்காவிடில் விரைவில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் ஈடுபட போவதாக தெரிவித்தனர். உடன் மருது பவுண்டேஷன் மாநில தலைவர் வேலூர் ஐஸ்வர்யா கார்த்திக் , செயளாலர் சித்தலூர் கார்த்தி உள்ளிட்ட சமூக அமைப்பினர் உடனிருந்தனர்.