சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல்
பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் வயது 27 இவர் தந்தை நெல் வியாபாரி என்று கூறப்படுகிறது. இவர் ரூபாய் 30 லட்சம் பணத்தை நகை வியாபாரி ஒருவரிடம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கை அடியில் வைத்து அரவிந்தன் வந்ததாக கூறப்படுகிறது. அரவிந்தன் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் வரும் போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அரவிந்தன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளி அரவிந்தன் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து 30 லட்சம் பணம் இருந்த அரவிந்தனின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தப்பிச்சென்றனர். சம்பா இடத்திற்கு காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நேரில் வந்து அங்குள்ள சிசிடி காட்சிகளை வைத்து உடனடியாக இரு தனிப்படைகள் அமைத்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.