தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் யாதுமானவள் கருத்தரங்கம்

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி மற்றும் தேவகோட்டை ரோட்டரி சங்கம், விருதுநகர் ரோட்டரி சங்கம் இணைந்து யாதுமானவள் ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் செபாஸ்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேவகோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் மனோகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் வசந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யாதுமானவள் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாரளருமான முனைவர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசியதாவது, வெற்றி என்பது எளிமையாக கிடைப்பது கிடையாது. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் தான் வெற்றி பெறமுடியும். மேலும் பதவி வரும்போது பணிந்து நடந்து கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் அடுத்த தலைமுறைகளுக்கு உதாரணமாகத் திகழவேண்டும். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்த வேண்டும் என்று கூறியதோடு அப்துல் கலாம் போன்ற வாழ்வில் சாதனைப் படைத்தவர்களின் வாழ்வியலைப் படித்து அதன் வழி நடக்க கற்றுகொள்ள வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். பின்பு மாணாக்கர்களின் வினாக்களுக்கு விடையளித்து பரிசு வழங்கினார். முன்னதாக பெண்கள் பிரிவின் கல்வி முதன்மையர் முனைவர் திருமாகள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

தொடர்புடைய செய்தி