சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரம் வடக்கு இரண்டாவது குறுக்கு தெருவில் ரத்தின செலவம் வசித்து வருகிறார் கடந்த 2015 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் வினோதினி - ரத்தின செலவம் திருமணம் நடந்த நிலையில் சென்னையில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது , இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ரத்தினம் செல்வம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் விகாரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கு வினோதினியின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் ஆத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றியது இதனிடையே வழக்கை விசாரித்த ஆத்தூர் நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிட்டதற்கும் ரத்தினம் செல்வம் நீதிமன்ற உத்தரவையும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும்
ஜீவனாம்சமாக 10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டதையும் மதிக்காததால் இருந்து வருவதாகவும் வினோதினி இன்று தன் 8 வயது குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்தின செல்வத்தின் தந்தை மற்றும் தாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் அவர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்
இதனையடுத்து இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறினர் காவல் துறையினர்.