சிவகங்கை: சுவர் இடிந்து விழுந்து வீடு சேதம்.. சிறு காயங்களுடன் மீட்பு

73பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (டிசம்பர் 12) இரவு முதல் தற்போது வரை தொடர் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ராஜபாண்டியின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தொட்டியில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை மாட்டிக்கொண்டது. அருகில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சுவர் இடிந்த சத்தம் கேட்டு குழந்தையை சிறு காயங்களுடன் மீட்டனர். தற்போது சம்பவ இடத்தில் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை மேற்கொண்டு உரிய நிவாரணம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி