சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல் சாலை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று வலதுபுறம் திரும்ப முயன்ற 60 வயது முதியவர், பின்னால் வேகமாக வந்த காரில் மோதுண்டு காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், அதற்குக் காரணமாக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதையே பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.