சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் இம்மாதம் 22 ஆம் தேதி பட்டப் பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் 30 லட்சம் ரூபாய் பணத்துடன் தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்ற பொழுது அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி அவரை கீழே தள்ளி பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு அவர் பணம் எடுத்து வந்த இருசக்கர வாகனத்துடன் மூன்று பேர் தப்பி சென்றனர்.
இது குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இதில் தொடர்புடைய பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காரைக்குடி சுப்ரமணியத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் அவரது கூட்டாளியான காளையார்கோயிலை சேர்ந்த செல்வகுமார் என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர். மேலும் திருச்சியை சேர்ந்த ஒரு நபரை தேடி வருகின்றனர்.