புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உணவு பாதுகாப்புத்துறை சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது. தனியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான முறையில் நடத்திய விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் டிஎஸ்பி பார்த்திபன் பேசும்போது, கஞ்சா, புகையிலை, மது போதையால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. பெரும்பாலான குற்றங்களுக்கு கஞ்சா, மது போதையே காரணமாக உள்ளது. கஞ்சா போதையில் உள்ளவர் நினைத்த குற்றத்தை செய்கிறார்.
புகையிலை, போதைப் பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் காக்கப்படும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி