சிவகங்கை: பழனிக்கு 43 காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணம்

56பார்த்தது
வருகின்ற 11ம் தேதி செவ்வாய்கிழமை அன்று தைப்பூசம் நடக்கிறது. பல நூற்றாண்டு காலமாக தைப்பூசத்திற்காக பழனிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் காவடிகள் எடுத்தும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். தேவகோட்டையில் இருந்து பழனிக்கு முதலியார் காவடி முதல் காவடியாகவும் நகரத்தார் காவடிகள் 42ம் சேர்த்து மொத்தம் 43 காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். 

தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்தில் இருந்து காவடிகள் புறப்பட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து சிலம்பனி ஸ்ரீ சிதம்பர விநாயகர் கோவிலை சென்றது. மாலையில் சுப்பிரமணி என்பவர் எடுத்து வந்த முதலியார் காவடி நகரின் முக்கிய வீதி வழிகள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தது. அரோகரா பூஜை நடைபெற்றது. 

இன்று 4ம் தேதி அதிகாலையில் காவடிகளுக்கு பூஜை செய்து காவடிகள் புறப்பட்டது. தேவகோட்டை எல்லையில் காவடிகள் வழி நெடுகிலும் மயில் போன்று ஆட்டம் ஆடியது. பின்னர் கட்டியம் பாடல் பாடி வழி அனுப்பி வைத்தனர். காவடிகள் வரும் வழியில் வேலுக்கு பன்னீர் அபிஷேகம் எலுமிச்சம்பழம் மாலைகள் அணிவித்து காவடிகளுக்கு துண்டு அணிவித்து பக்தர்கள் பொதுமக்கள் வழிபட்டனர். காவடிகள் செல்லும் பொழுது பிஸ்கட், சாக்லேட், பழங்கள், உணவுகள் போன்ற பொருட்களை வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி