ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவரை பாராட்டிய அறங்காவலர்

73பார்த்தது
ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவரை பாராட்டிய அறங்காவலர்
தமிழ்நாடு தடகள கழகம் சார்பில் சென்னையில் நடந்த மாநில ஜூனியர் பிரிவுக்கான 600 மீட்டர் ஓட்ட போட்டியில் சிவகங்கை மாணவர் வி. வித்தின் வெள்ளி பதக்கம் வென்றார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஜூனியர் பிரிவுக்கான தடகள போட்டி நடைபெற்றது 
இதில், சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் வி. வித்தின் வயது 16 பிரிவுக்கான 600 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். வயது 14 பிரிவில் கே. கோகுல்துரை நீளம் தாண்டுதலில் 4 ம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற இம்மாணவர்களை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் ரொக்க பரிசு வழங்கினார். மன்னர் கல்வி நிறுவன செயலர் குமரகுரு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், தடகள பயிற்சியாளர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் பாராட்டினர் .

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி