சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புக்குழி கிராமததொடக்கப் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நினைவாக அமைச்சர் பெரிய கருப்பன் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு நாள் இன்று இளையான்குடி பேரூர் கழகம் மற்றும் வட வடக்க ஒன்றிய திமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று மாலை என்புக் குழிஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூட்டுறவு துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளருமானகே ஆர். பெரிய கருப்பன் தலைமையில்மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான சுப. மதியரசன் ஆகியோர். முன்னிலையில் கலைஞரின் பிறந்த நாள் நினைவாக பல்வேறு மரக்கன்றுகளைஅமைச்சர் கே ஆர் பெரிய கருப்பண் நடவு செய்தார்.
முன்னதாக பிற்பகலில்இளையான்குடி மாதவன் நகர் செந்தமிழ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக கொடிகளை ஏற்றிதிமுகவினர் ஒன்று கூடிகலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு மலர் தூவிமரியாதை செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கோடையின் தாக்கத்தை குறைக்க மோர் போன்ற குடிதண்ணீர் போன்றவற்றை வழங்கினார்கள்.