இந்தியா கூட்டணி வெற்றி பட்டாசு வைடித்து கொண்டாடிய திமுகவினர்

81பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வர் தமிழினதலைவர்டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணிவெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள 23வது வார்டில்முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ஜாகிர் உசேன் ஏற்பாட்டில்திமுக பொதுக்குழு உறுப்பினர் மதார் சேட் தலைமையில்மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன் முன்னிலையில் கழக கொடியேற்றி கேக் வெட்டிபட்டாசு வெடித்தும்இனிப்புகள் வழங்கியுமபள்ளி குழந்தைகளுக்கு எழுது பலகை எழுதுகோல், மற்றும் பல உபகரணங்கள் வழங்கியும் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் எனநலத்திட்ட உதவிகள் வழங்கி கழக முன்னோடிகளுக்கு சால்வை , வேஸ்டிஅணிவித்து கௌரவித்து உற்சாகமாக கொண்டாடபட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் ஜாபர், தொமுச முன்னாள் நிர்வாகி செந்தில் குமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி