சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள சிவன் கோவில் பகுதியில்
அமமுக சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில்
டிடிவி தினகரன் கலந்துகொண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்:
தேர்தலில் திமுகவை டெபாசிட்டை காலி செய்தது, பழனிசாமி கம்பெனியை ஓட செய்த சின்னம் தான் குக்கர். கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நிறுத்தி பல லட்சம் வாக்குகளையும் பெற்று துரோகிகளுக்கு மரண அடி கொடுத்தோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கூட திமுக என்ற ஒரே ஒரு எதிரி தான். ஆனால் அமமுகவுக்கு பரம்பரை எதிரி திமுக, துரோக சக்தி பழனிசாமி ஆகிய 2 பேரையும் எதிர்க்கிறோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நமக்கு எம்எல்ஏ கிடைக்காவிட்டாலும், துரோகிகளை வீழ்த்தினோம்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு நடக்கின்றன. கண்ணங்கோட்டையில் இருவரை கொலை செய்து கொள்ளை, கல்வழியில் 5 பேரை தாக்கி கொள்ளை என சட்டஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ரவுடி ராஜ்யம் தொடங்கிவிடும். ஜெயலலிதா ஆட்சியில் என்கவுண்டருக்கு பயந்து வெளிமாநிலங்களுக்கு ஓடி விட்டனர். தற்போது தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளசாராயம் பெருகிவிட்டது.
பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில் யென தெரிவித்தார்.