சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 375 மாணவ, மாணவியர் ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான கலைப் போட்டிகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் செல்லும் பயணத்தை ஆட்சியர் ஆஷா அஜித் மருது பாண்டியர் நகர் பகுதியில் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்: அரசுப் பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 144 மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு 4 பேருந்துகளில் செல்கின்றனர்.
4.1.2024-ல் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் வெற்றிபெற்ற 100 மாணவ மாணவிகள் 2 பேருந்துகளில் மாநில அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
மேலும், 3.1.2024-ல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 131 மாணவர்கள் 3 பேருந்துகளில் மாநில அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மாணவர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்கின்றனர். என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.