மாணவர்களுக்கான திறமை வெளிப்பாட்டு நிகழ்ச்சி

83பார்த்தது
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலை பண்பாட்டு மையம் நடத்திய மாணவர்களுக்கான திறமை வெளிப்பாட்டு நிகழ்ச்சி (Alagappa University Talent Exhibit Show- ALUTES) நடைபெற்றது. இந்த நிகழ்வை பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கர்னல். க. ரவி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், சிறப்பு விருந்தினராக வந்த பின்னணி பாடகி பத்மஸ்ரீ சின்ன பொண்ணு குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அவற்றில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டினர். நிகழ்வின் நிறைவு விழா நேற்று முன்தினம் (மார்ச் 8) நடைபெற்றது. இந்த நிகழ்வினை கலை பண்பாட்டு மைய துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஞா. சிவகுமார் வரவேற்புரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களை கலை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. இலங்கேஸ்வரன் அறிவித்தார் பின்னர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், திரைப்பட நடிகர் கவிதா பாரதி மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. மாங்குடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் கர்னல். க. ரவி அவர்களும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் கவிதா பாரதி அவர்களும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி