சிவகங்கை காரைக்குடி அருகே வேட்டைக்காரன் பட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரியக்குடி உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த மூன்று கிலோமீட்டர் தூரமும் சாலை பள்ளமும், படுகுழியுமாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய எல்லையை காரணம் காட்டி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சாலை போட மறுத்து வருவதாகவும் வேட்டைக்காரன் பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.