சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் அழகப்பா பூங்கா அருகில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இன்று 1ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினார். முருகனை தரிசிக்க பல நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்து அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.