தினசரி மார்க்கெட் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு கடைஅடைப்பு

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பஸ்நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன் காரணமாக தினசரி மார்க்கெட்டினை விவசாய பண்ணை அருகே மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக சிலம்பனி ஊரணியைச் சுற்றி வைத்துக் கொள்ளவும் இப்போது இருக்கும் மார்க்கெட் கடைகள் 30தினங்களுக்குள் காலி செய்திட தேவகோட்டை நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்தது. இதற்கு தினசரி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி