சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சாலை பாதுகாப்பு சார்பாக விழிப்புணர்வு வாகன பேரணியை தேவகோட்டை சார்பு நீதிபதி கலை நிலா, நீதித்துறை நடுவர் மாரிமுத்து, டிஎஸ்பி கௌதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து உதவி மேலாளர் கந்தசாமி கிளை மேலாளர் மோகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை பஸ் நிலையம் வழியாக சிவன் கோவில் முக்கு வரை சென்று பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஒருங்கிணைத்தார் இதில் காவல் துறையினர்,நீதித்துறையினர், தமிழ்நாடு போக்குவரத்து துறையினர் சமூக ஆர்வலர்கள் சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.