தேவகோட்டையில் தங்கப் படியில் அரிசி வழங்கும் நிகழ்ச்சி

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தில், தங்கப் படியில் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நகர சிவன் கோயிலில் சுந்தரேசுவரர், மீனாட்சி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காந்தி ரோடு, கருதாவூரணி உள்ளிட்ட வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று, கோயிலை வந்தடைந்தனர். அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் அரிசியை தூவிச் சென்றனர். பின்னர், கோயில் முன் உலக ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் வகையில், தங்கப் படியில் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரிசியை வாங்கிச் சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி