ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இன்று 3. 41 மணிக்கு இடம் பெயர்ந்தார், தமிழகத்தில் உள்ள ராகு கேதுக்கு பிரசித்தி பெற்ற தலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதனையொட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி முன்னிட்டு இன்று மாலை சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு 9 வகையான நவதானியம், பூக்கள், தேங்காய் பழம், உள்ளிட்ட ஹோம பொருட்கள் யாகத்தில் இடப்பட்டு மகா பூர்ணகுதி அளிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர், பால், சந்தனம், இளநீர் கொண்டு நவகிரகங்களில் உள்ள ராகு கேதுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த ராகு கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு கேதுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.