சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா், தேவகோட்டை ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் நாளைதிங்கள்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அமராவதிபுதூா், தேவகோட்டை ரஸ்தா, தொழில்பேட்டை, ஜமீன்தாா் குடியிருப்பு, அரியக்குடி, ஆறாவயல், எஸ். ஆா். பட்டணம், விசாலயன்கோட்டை, கல்லுப்பட்டி, கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.