சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ராம்நகர், ஆண்டவர் செட், தியாகிகள் சாலை, சரஸ்வதி வாசகசாலை, பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகள், வாடியார் வீதி, பழனியப்பன் சந்து, கருதாஊரணி பகுதிகள், கண்டதேவி ஒத்தக்கடை பகுதிகள், வட்டாணம் ரோடு, சருகணி செல்லும் பாதை, ஆற்றுப்பாலம் ஒத்தக்கடை, காந்திரோடு, பகுதிகள், என நகரின் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்களால் பொதுமக்கள் போக்குவரத்தில் சிரமப்பட்டு வந்தனர். தற்போது புதிதாக பொறுப்பேற்ள்ள தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கௌதம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக போலீசாருடன் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று 20ம்தேதி வரை கெடு விதித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று டி. எஸ். பி. கௌதம் தலைமையில் போலீசார், நகராட்சி ஆணையாளர் தாமரை மற்றும் நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஜே. சி. பி. இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.