தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) அதன் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகளை இயக்கி, மக்களுக்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்தச் சேவையின் தொடர் செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையில், போக்குவரத்துத் துறை புதிய பணியாளர் நியமனத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, 2, 340 ஓட்டுநர்-நடத்துநர் (DCC) பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்பப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்டில் காரைக்குடியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிநியமன விதிமுறைகளை மாற்ற வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த மற்றும் தற்போதும் பணியில் உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென ஆட்சியர்
அலுவலகத்தில் ஆஷா அஜித்திடம் மனு அளித்துள்ளனர்