காரைக்குடி: திருவேங்கடமுடையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்று போற்றப்படும் அரியக்குடியில் அலர்மேலு மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியான இன்று (ஜனவரி 10) அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் கோவில் நடை திறக்கப்பட்டு அதன் பின்னர் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

அதன் பின்னர் திருவேங்கடமுடையான் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரத்தில் அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தேசிகர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி முன்பாக காட்சி தந்து தொடர்ந்து பரமபத வாசலை வந்தடைந்தார். காலை 6.00 மணியளவில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் முழங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ரத்ன அங்கியுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து நம்மாழ்வாருக்கு மோக்ஷம் கொடுத்தார். 

காலை 6.30 மணிக்கு பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் திரளாக வந்து கோயில் ராஜகோபுர வாசலிலிருந்து சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். சுவாமி சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளியதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி