சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சூரக்குடியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடத்தப்பட்டது.
சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,
மதுரை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மஞ்சுவிரட்டுக்காக 10 மாடுகள் கொண்டுவரப்பட்டது.
இதில் நான்காவதாக பங்கேற்ற மாட்டை பிடிக்க சேலத்தில் இருந்து வந்த ஒன்பது பேர் கொண்ட குழு களம் இறங்கியது.
அப்போது கார்த்திக் என்ற வீரரை மாடு குத்தியதில் படுகாயம் அடைந்தவரை காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.
உடனடியாக மஞ்சுவிரட்டு போட்டி நிறுத்தப்பட்டு, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.