திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

61பார்த்தது
திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியின் சாதாரணநகர்மன்றகூட்டம் இன்று நகர் மன்ற தலைவர் முத்துத்துரை நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் திமுக அதிமுக காங்கிரஸ் சிகிச்சை கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆணையர் கூட்டத்திலிருந்து கிளம்பினார் இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் அவரிடம் பதில்கள் பெறவேண்டி உள்ளது எனவே அவர் கூட்டம் முடியும் வரை ஆணையாளர் இருக்க வேண்டுமென்று அதிமுக 27 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசினார் அப்போது திமுக அதிமுக கவுன்சிலர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது இதில் 36 நகர மன்ற உறுப்பினர்கள் உள்ள நகர மன்ற கூட்டத்தில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படவும் கூட்டம் முடிந்ததாக நகர்மன்ற தலைவர் அறிவித்து தேசிய கீதம் பாடத் தொடங்கினர் அப்போது தேசிய கீதம் பாடுவது பற்றி கவலைப்படாமல் தீர்மானம் எண் 30 ல் சிறு சிறு குரு நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொழில் வரி உயர்வு தீர்மானம் குறித்து பேச மறுப்பதாகவும் வாழ்க கோஷம் போடும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பேச நகர மன்ற தலைவர் அனுமதிப்பதாக கூறி தேசிய கீதம் பாடும் போதே 11-வது வார்டு கவுன்சிலர் மெய்யர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வது போல பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி