தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் மாதாந்திர சாதாரணக் கூட்டம்

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமையில், துணைத் தலைவர் ராஜாத்தி நடராஜன், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய மாநில அரசின் திட்டங்கள் சாலை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்துள்ளேன், முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், இக்கூட்டத்தில், ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி