சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட குட்டிதிண்ணி கிராமத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9. 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா செயலாளர் இளங்கோவன் ஒன்றியச் செயலாளர் செல்வமணி மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி நகரச் செயலாளர் ராஜா, சித்தலூர் பிரபாகரன், புதுப்பட்டி சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.