சிவகங்கை: முதல்வர் வருகை குறித்து அமைச்சர் பேட்டி

74பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜனவரி 21, 22 சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை ஒட்டி சிவகங்கையில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில்: 21ஆம் தேதி காரைக்குடியில் மத்திய நிதி மற்றும் உள்துறை முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் குடும்பத்தினர்கள் கட்டி பல்கலைக்கழகத்திற்கு தருகின்ற வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அதே பல்கலைக்கழக வளாகத்தில் அமையப் பெற்றிருக்கின்ற அய்யன் திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்து பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றுகிறார். பின்னர் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. 

மறுநாள் காலை 22ஆம் தேதி சிவகங்கையில் நடைபெறக்கூடிய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு கால்கோள் விழா, முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பது அனைத்தையும் முதலமைச்சர் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக் கல்லூரி வளாகத்தில் அவர் துவக்கி வைக்கிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி