காரைக்குடியை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் நேற்று (டிச. 22) தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் அரவிந்தன் வாகனத்தை இடித்து அவரை கீழே தள்ளினர். பின்னர் அவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு அவரிடம் இருந்த ரூ. 30 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.