கடம்பாகுடி கிராம மக்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கோரிக்கை

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுநல்லூர் ஊராட்சி, கடம்பாகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் மாலை 6: 00 மணிக்கு மேல் மின்சாரம் மிகக் குறைந்த அழுத்தத்துடன் மட்டுமே வருகின்றதாகவும், இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி அவதிப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தீர்க்க மின் வசதிகளை மேம்படுத்தி, புதிய டிரான்ஸ்பார்மர் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியரகப் பகுதியில் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி