சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி இவ்வாறு கூறினார். மேலும், வக்ஃபு
திருத்த சட்ட மசோதா விற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றவர்,
மூன்று முறை ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசு தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவே சட்டங்களை இயற்றி வருகிறது என்றும், ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு நிறுத்திய கல்வி நிதிகளை எல்லாம் தமிழக அரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.