சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விசாலையங்கோட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ. 99. 16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடத்தினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், விசாலையங்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்