சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோவிலில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு வெற்றி தரும் ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு யாகம் செய்து பூரணாகதி நடைபெற்றது அதைத் தொடர்ந்து பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் மற்றும் பூஜை செய்த புனித கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை காண்பித்தனர். மாலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து வெற்றிலை மாலை அணிவித்து ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் நாமங்களை கூறி வழிபட்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.