நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில்அடைப்பு எஸ்பி தகவல்

54பார்த்தது
சிவகங்கை அண்ணாநகரைச் சேர்ந்தவர் நித்திஷ்குமார் (21). இவரை மே 19-ம் தேதி முன்விரோதத்தில் ஒரு கும்பல் கொலை செய்தது. சிவகங்கை நகர் போலீஸார் புதுப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன், கல்லுப் பட்டியைச் சேர்ந்த குமரேஸ் வரன், சுகுமார், கரும்பாவூரைச் சேர்ந்த பாண்டிச் செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி