சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முப்பையூர் விலக்கில் திருவேகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விவேக்(29) என்பவர் நடந்து சென்றார், அப்போது பின் தொடர்ந்து வந்த மேக்காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான அஜித் குமார் அரிவாளைக் காட்டி விவேக்கிடமிருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து பின்னர் விவேக்கை அறிவாளால் முதுகில் தாக்கிவிட்டு அஜித் குமார் தப்பி சென்றார், இது குறித்து விவேக் தாலுகா காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார் ,
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைத்து ஒரு மணி நேரத்தில் தலைமறைவாக இருந்த அஜித் குமாரை
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கைது செய்தனர், பின்னர் விசாரணையில் அஜித் குமார் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடைய குற்றவாளியான இவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்.