பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பரபரப்பு பேட்டி

76பார்த்தது
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடைபெற்று உள்ளது. இதில் அரசியல் நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றவர், எல்லா குற்றங்களுக்கும் பின்னணிகள் போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளது. போதைப் பொருட்களில் திமுக முழுவதும் மூழ்கிப் போய் உள்ளது. ஆதலால் தமிழக முதல்வர் ராஜினாமா செய்வதை சிறந்தது என்றார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்ததன் மூலம் காவல் துறையினர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைத்துமே காவல் துறையின் கண்டு துடைப்பு வேலைகள் என குற்றம் சாட்டியவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு, சென்னையில் வெள்ளம் நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ800 கோடிக்கு செலவு செய்த பயன்பாடு கணக்கினை தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்படி காசை கூட மத்திய அரசு வழங்காது என்ன உறுதியாக H. ராஜா தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி