தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் அவசரக் கூட்டம்

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 100% வரி வசூல் செய்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். குடிநீர் தட்டுப்பாடு உள்ளது, நகர் பகுதிகளில் அதிகரிக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 

திருப்பத்தூர் சாலையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தி பேசினர். திருப்பத்தூர் சாலையில் உள்ள பள்ளி அருகில் குப்பைகளை கொட்டினால் அபராதம், மற்றும் கடுமையான நடவடிக்கை குறித்து பேசினர். நகராட்சி ஆணையாளர் தாமரை கவுன்சிலர்களை மதிப்பதில்லை, எந்த கேள்விகளுக்கும் சரியான பதில் தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டினர். 

மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சியில் 100% வரி வசூல் செய்ததற்கு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சி இறுதியில் ஆணையாளர் தாமரை தலைமையில் நகர மன்ற துணை தலைவர் ரமேஷ், நகர மன்ற திமுக உறுப்பினர் பெரிபாலா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 

மகளிர் கவுன்சிலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நகராட்சி பொறியாளர் மீரா அலி, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி