சிவகங்கை: ஆக்கிரமிப்புகளை அகற்ற டி எஸ்.பி உத்தரவு

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியானது வளர்ந்து வரும் நகராட்சிகளில் ஒன்றாகும். தேவகோட்டை ராம்நகரில் இருந்து ஆற்றுப்பாலம் ஒத்தக்கடை வரை மூன்று கி.மீ. நீளத்திற்கு திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியாகும்.

இது நீங்கலாக நகரின் முக்கிய சாலைகளான தியாகிகள் சாலை, சரஸ்வதி வாசகசாலை, பஸ் நிலைய எதிர்புறம் உள்ள மெயின் சாலை, வாடியார் வீதி, பழனியப்பன் சந்து, ஆண்டவர் செட்டி பகுதிகள் என இன்னும் ஏராளமான வீதிகளில் வர்த்தக நிறுவனங்கள் சிறிய பெரிய அளவிலான வணிகம் செய்து வருபவர்கள் உள்ளனர். மேற்கூறிய அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் ஆக்கிரமிப்பு கடைகளாலும் பெரிய வர்த்தகம் செய்து வருபவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாலும் போக்குவரத்துக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. 

இதனால் பொதுமக்கள் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தேவகோட்டை டி.எஸ்.பி. கௌதம் தலைமையில் தேவகோட்டை நகர் காவல்நிலைய போலீசார், டிராபிக் போலீசார் என காவல்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி