சிவகங்கை மாவட்டம், நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணாக்கர்களுக்கு பதக்கம், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேவகோட்டை ஆனந்தா கலைக்கல்லூரியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் முன்னிலையில் வழங்கி தெரிவிக்கையில்:
நேரு யுவகேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. அவ்வண்ணமே, இவ்வாண்டும் வெகு சிறப்பாக சிவகங்கை மாவட்டத்தில், இவ்விழாவானது நடைபெற்றுள்ளது. இப்போட்டிகளானது மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடைய உள்ளது.
நேரு யுவகேந்திரா மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இளையோர் திருவிழாவினை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி (தனிநபர் மற்றும் குழுப் போட்டி), இளம் எழுத்தாளர்களுக்கு கவிதை போட்டி, இளம் கலைஞர்களுக்கு ஓவிய போட்டி மற்றும் கைப்பேசி புகைப்பட போட்டி, பேச்சுப்போட்டி, கலைத்திருவிழா நாட்டுப்புறப் பாட்டு கதை எழுதுதல் போன்ற போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று, அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.