சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர்கள் புவனேஸ்வரி இவருடைய சகோதரி மீனாகுமாரி. இவர்களது உறவினரான சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றும் பிரபாவதியின் திருமணத்திற்காக 2012 ஆம் ஆண்டு 50 பவுன் நகை மற்றும் ஐந்து கிலோ வெள்ளி பொருட்கள் கடனாக வாங்கி திருமணம் செய்ததாகவும் அந்த பணத்தில் பாதி பணத்தை இதுவரை தரவில்லை எனவும், எனவே அந்த பணத்தை கேட்டு காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரபாவதி வீட்டிற்கு சென்று மீனாகுமாரி மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியான பிரபாவதியும் அவரது தம்பியும் சேர்ந்து புவனேஸ்வரியை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் புவனேஸ்வரியை காப்பாற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் புகார் வாங்கிக் கொண்டு சென்றனர் இந்நிலையில் இந்த புகார் மீது எந்தவித வழக்கும் பதியவில்லை எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய இந்த கொடூர செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.