சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வெள்ளையன் ஊரணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுர மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி செவ்வாய் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. தி. ஊரணி விநாயகர் கோவிலில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று கோவில் முன்பு பூக்குளியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.