சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து 1000த்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இதில் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர், அனைத்து கட்சியினை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.