அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

4262பார்த்தது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நீர்குன்றம் கிராமத்தைச்சேர்ந்த ராமன் மகன் சரவணன் (43) இவர் கட்டிடவேலை செய்து வருகிறார் இவருக்கு மனைவிமற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தாழையூர்கிராமத்தில் வசித்துவரும் நிலையில், தேவகோட்டைக்கு சமையல் பொருட்கள்வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது தாழையூர் அருகேபின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் காயம் அடைந்தநபரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து தேவகோட்டை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி