சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு துவக்க விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு 100 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு சிபிஐ நகர செயலாளர் சுப்பையா தலைமையில் கொடியேற்றி மற்றும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தியாகிகள் பூங்காவில் உள்ள தியாகிகள் நினைவு தூணிற்கு மாலை அணிவித்து வீர கோஷங்கள் எழுப்பி இருசக்கர வாகன பேரணியை சிபிஐ மாவட்ட நிர்வாக குழு காமராஜ் துவக்கி வைத்தார். பேரணி தியாகிகள் பூங்காவில் இருந்து பஸ் நிலையம், வாரியார் வீதி, தியாகிகள் சாலை, திருப்பத்தூர் சாலை, ராம்நகர் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று ராம்நகர், யூனியன் பஸ் நிலையம், ஜீவா நகர், ஒத்தக்கடை, கண்டதேவி ரோடு பகுதிகளில் கட்சியில் கொடியை மாவட்டச் செயலாளர் சாத்தையா ஏற்றி வைத்து தெருமுனை பிரச்சாரம் செய்தனர் இதில் கட்சியின் நகர பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர்கள் சீதாராமன்,
சேவத்தாள் முன்னிலை வைத்தனர். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.