சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை வணக்கம் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆசிரியர் ராமராஜ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பூரண சந்திர பாரதி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பெண் குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும், யாரேனும் உங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும், உங்களது ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும் என கூறினார். லயன்ஸ் இன்டர்நேஷனல் ஆலோசனைப்படி தேவகோட்டை அரிஸ்டோ லயன்ஸ் சங்கம் சார்பாக பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக அமைதிக்கான வரைபட போட்டி நடைபெற்றது.
இதில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தினர். அதில் அகிலேஷ், மோகித் சூரியா, ஆகாஷ் ஆகிய மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சார்பு ஆய்வாளர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவலர் சொர்ணவள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.