சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவந்திடல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக கௌசிகா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அப்பணியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க கோரி திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முதுவன்திடலை சேர்ந்த ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசனின் உறவினர்கள் 8 பேர் முறையிட்டனர். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்தவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த முதுவன்திடல் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி மகாஜனனிடம், இவர் இதற்கு காரணம் என கூறி, அவரது சமூகத்தை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கௌரி மாகாஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி இயக்குனர் கேசவதாசனின் உறவினர்கள் 8 பேர் மீது திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.