நடந்து சென்றவரை தாக்கியதாக 3 நபர்கள் மீது வழக்கு

62பார்த்தது
நடந்து சென்றவரை தாக்கியதாக 3 நபர்கள் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் வயது 40இவர்  கீழ் மேல்குடி பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார் அப்பொழுது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த
கீழ்மேல்குடி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஏ. விளக்குளம்பகுதியைச் சேர்ந்த, புலிப்பாண்டி, ஆகியோர் கணேசனை வழிமறித்து சாதியை சொல்லி அவதூறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி கண்ணன் வழக்கு பதிவு செய்து மூன்று நபர்கள் குறித்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்

தொடர்புடைய செய்தி